17 7
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் இடம்பெற்ற நூதன மோசடி : குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Share

அமெரிக்காவில் இறந்தவர்களின் அஸ்திகளில் இடம்பெற்ற மோசடி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி சுமார் 190 சடலங்களை பதுக்கி வைத்துவிட்டு, அவற்றை எரித்ததாக, போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றியவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலராடோ மாகாணத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இறுதிச் சடங்கு நடத்தும் நிலையத்தை நடத்தி வரும் ஜோன் ஹோல்போர்ட் என்பவருக்கு சொந்தமான ஒரு பாழடைந்த கட்டடத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள், கடந்த 2023இல் பொலிஸில் முறையிட்டிருந்தனர்.

அமெரிக்காவில் இடம்பெற்ற நூதன மோசடி : குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை | New Scam In United States

இதையடுத்து பொலிஸார் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, சுமார் 190இறுதிச்சடங்குகளுக்கான உடல்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு சிதைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்தநிலையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, கோவிட் காலத்தின்போது, 2019 முதல் 2023 வரை, ஹால்போர்ட் மற்றும் அவருடைய மனைவி கேரி ஆகியோர் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு உடல்களை எரிக்காமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

அத்துடன், கோவிட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதற்காக, அரசிடம் இருந்தும் அவர்கள் பல மில்லியன் டொலர்களை பெற்றுள்ளனர் என்பதும் தெரியவந்தது.

அதேநேரம் உடல்களை எரித்ததாகக் கூறி உறவினர்களிடம் போலி அஸ்தியை வழங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், ஜோன் ஹோல்போர்டுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...

gota
இலங்கைஅரசியல்செய்திகள்

நிரந்தர முகவரிகளைச் சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு: முன்னாள் ஜனாதிபதி உட்படப் பல முக்கிய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு!

‘அரகலய’ போராட்டத்தின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட...

images 9 1
இலங்கைஅரசியல்செய்திகள்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் ஆயுதங்களே இருந்தன; ஆவணங்கள் கிடைத்துள்ளன – இன்டபோல் விசாரணைக்கும் தயார்: அர்ச்சுனா இராமநாதன் சவால்!

எவ்விதப் பரிசோதனையுமின்றி விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்குள்ளும் ஆயுதங்களே இருந்தன என்பதை மீண்டும் தான் பொறுப்புடன்...