9 31
உலகம்செய்திகள்

கனடாவிற்கான எக்ஸ்பிரஸ் நுழைவு முறையில் புதிய மாற்றம்

Share

கனடாவிற்கான எக்ஸ்பிரஸ் நுழைவு முறையில் புதிய மாற்றம்

2025ஆம் ஆண்டு முதல் கனடாவில் வேலை வாய்ப்புக்கான கூடுதல் புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயன்முறை மாற்றத்தின் மூலம் கனடாவின் எக்ஸ்பிரஸ் நுழைவு(Express Entry) முறையில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் சில பணிகளில் அந்நாட்டு தொழிலாளர்களுக்கு பதிலாக வெளிநாட்டவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இதற்கு தேவையான ஆவணமாக ‘LMIA'(Labour Market Impact Assessment) உள்ளது. தற்போது, எக்ஸ்பிரஸ் நுழைவு முறையில் புதிய மாற்றம் நடைமுறைக்கு வருமானால், ஆவணங்களை சட்டவிரோதமாக வாங்குவது அல்லது விற்பனை செய்வது போன்ற முறைகேடுகள் குறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எக்ஸ்பிரஸ் நுழைவு முறை மூலம் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறும் விண்ணப்பதாரர்களின் வேலை வாய்ப்புகளின் முக்கியத்துவம் குறைக்கப்படும்.

இதேவேளை, இந்த மாற்றம் கனடாவில் தற்காலிகமாக வேலை செய்து வரும் வெளிநாட்டவர்களை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதுவரை வேலையொப்பத்துடன் விண்ணப்பித்தவர்கள் அல்லது நிறுவனத்தால் அழைக்கப்பட்டவர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படமாட்டார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....