ஆப்கானில் புதிய கல்வி முறை – வைரலாகும் புகைப்படங்கள்!

ஆப்கானில் இடம்பெற்ற உள்நாட்டு போருக்குப் பின், அங்கு இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள பல்கலைக்கழகங்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.

தலிபான் கல்வி ஆணையம் கல்வி நிலையங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையில்,
மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புக்களை நடத்துதல் வேண்டும், நல்ல குணமுள்ள முதிய ஆண் ஆசிரியர்களைக் கொண்டே வகுப்புகள் எடுக்க வேண்டும். மாணவிகள் நிகாப், புர்கா போன்ற உடைகளை அணிந்தே கட்டாயம் பாடசாலை வரவேண்டும்என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு கல்வி பயிலும் மாணவர்களின் மற்றும் வகுப்பறையின் ஒளிப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

அதில் ஆண்– பெண் மாணவர்களுக்கு வகுப்பறையின் நடுவே திரை அமைத்து வகுப்புக்கள் நடைபெறுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

afcan 3

Exit mobile version