செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய நாசா
செவ்வாய் கிரகம் பற்றிய தகவல்களை ஆய்வு செய்ய இன்ஜெனியுட்டி என பெயரிடப்பட்ட விண்கலத்தை நாசா விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.
குறித்த விண்கலத்தை நேற்று(19.10.2023) நாசா அனுப்பி வைத்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, சீனா உள்பட பல நாடுகள் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா தொடர்ந்து பல ஆய்வுகளை செய்துவருகிறது.
இந்நிலையில் 2030ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப நாசா தயாராகியுள்ளதோடு, 63ஆவது பயணமான இந்த விண்கலம் சுமார் 90 வினாடிகள் வரை பறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் இருந்து பாறை மற்றும் மண்ணின் மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்படும். பின்னர் அவை பகுப்பாய்வு செய்யப்பட்டு அதன்பிறகு செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Comments are closed.