24 663e9347acb79
உலகம்செய்திகள்

2030 இல் நிலவில் தொடருந்து: நாசாவின் தொழிநுட்பம்

Share

2030 இல் நிலவில் தொடருந்து: நாசாவின் தொழிநுட்பம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) சந்திரனில் முதல் தெடருந்து அமைப்பை உருவாக்குவதற்கான வரைபடத்தை உருவாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆய்வு மையங்கள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி பல்வேறு வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அமெரிக்கா இன்னும் ஒரு படி மேலே சென்று அங்கு தொடருந்துகளை இயக்க விரும்புவதுடன் அதற்கான வரைபடத்தையும் உருவாக்கியுள்ளது.

நிலவில் மனிதர்களுக்கான மனித காலணியை அமைக்க அமெரிக்கா முயற்சி செய்து வருவதுடன் நிலவில் உள்ள விண்வெளி மையத்தின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான ரோபோ போக்குவரத்து அமைப்பு தயாரிக்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் 2030 ஆம் ஆண்டிற்குள் நிலவில் ஒரு தொடருந்து தளத்தை உருவாக்க அமெரிக்கா இலக்கு வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

நிலவில் ஓடும் தொடருந்து பூமியில் உள்ள தொடருந்திலிருந்து இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்குமெனவும் இதற்காக பிரத்யேக டிராக் தயார் செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாசா இதற்கு (Flexible Levitation on a Track ) என்று பெயரிட்டுள்ளதுடன் இது ஒரு அறிவியல் புனைகதை திரைப்படமாகத் தோன்றலாமெனவும் ஆனால் சில வருடங்களில் இது நிஜமாகலாமெனவும் நம்பப்படுகின்றது.

அத்தோடு, நாசாவின் வலைப்பதிவு ஒன்றில் ஜெட் ப்ராபல்ஷன் (Jet propulsion) ஆய்வகத்தின் ரோபோடிக்ஸ் பொறியாளர் எதெல் ஸ்க்லர், நிலவில் தொடருந்து திட்டம் பற்றிய தகவலை நாசா ஆரம்ப வடிவமைப்பிற்கு வழங்கியுள்ளார்.

குறித்த தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“ FLOAT அமைப்பில் மூன்று அடுக்கு படத்தடத்திற்கு மேலே காற்றில் பறக்கும் காந்த ரோபோக்களைக் கொண்டிருகப்பதுடன் இந்த பாதையில் கிராஃபைட் அடுக்கு இருக்கும்.

இது ரோபோக்களை டயாமேக்னடிக் லெவிடேஷன்(Diamagnetic levitation) மூலம் மிதக்கச் செய்வதுடன் இரண்டாவது அடுக்கு ஃப்ளெக்ஸ் சர்க்யூட்டாக(Flex circuit) இருக்கும்.

இது மின்காந்த உந்துதலை உருவாக்குவதனால் ரோபோக்கள் முன்னோக்கி செல்ல இயலும் அத்தோடு சூரிய ஒளியில் இருந்து சக்தியை உருவாக்கும் சோலார் பேனலின்(Solar panel) மெல்லிய அடுக்கு இருக்கும்.

இதனுடன் FLOAT ரோபோக்களில் நகரும் பாகங்கள் எதுவும் இருக்காததுடன் அவை பாதைக்கு மேலே பறக்கும் இதனால் சந்திர மேற்பரப்பு காரணமாக ரோபோக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது.

ரோபோக்களில் வண்டிகள் பொருத்தப்படும் என தெரிவித்துள்ள நாசா அவற்றின் வேகம் மணிக்கு 1.61 கிலோமீற்றராக இருப்பதுடன் நாசாவின் எதிர்கால தளத்திலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 100 டன் பொருட்களை ரோபோக்களால் எடுத்துச் செல்ல முடியும்.

நிலவின் தூசி நிறைந்த, கடுமையான சூழலில் குறைந்த தள தயாரிப்புடன் FLOAT தன்னாட்சி முறையில் செயல்படும் என்று நாசா கூறியது.

ஆர்ட்டெமிஸ் மிஷன்(Artemis Mission) மூலம் 2026 ஆம் ஆண்டுக்குள் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா விரும்புவதுடன் எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு நிலவில் நிரந்தர தளத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...