இந்தியாஉலகம்செய்திகள்

ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன்- பிரதமர் நரேந்திர மோடி

Share
18 4
Share

ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன்- பிரதமர் நரேந்திர மோடி

சிவகங்கை சீமை தந்த, தென்னாட்டு ஜான்சி ராணி என போற்றப்பட்ட, வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம் இன்று.

வளரி, சிலம்பம், களரி என பல தற்காப்பு கலைகளில் வேலு நாச்சியார் சிறந்து விளங்கியவர்.

ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடியவர் வீரமங்கை ராணி வேலு நாச்சியார்.

இன்று அவரின் 295 வது பிறந்த தினத்தை ஒட்டி தலைவர்கள் பலர் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் “துணிச்சலான ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன்! காலனித்துவ ஆட்சிக்கு எதிராக அவர் ஒரு வீரப் போராட்டத்தை நடத்தினார், இணையற்ற வீரத்தையும், போர்தந்திர திறமையையும் வெளிப்படுத்தினார்.

ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சுதந்திரத்திற்காகவும் போராடப் பல தலைமுறைகளை அவர் ஊக்குவித்தார். பெண்களுக்கு அதிகாரமளித்தலிலும் அவரது பங்கு பரவலாகப் பாராட்டப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...