மியான்மாரில், மத கொண்டாட்டத்தின் போது, அந்த நாட்டின் இராணுவம் நடத்திய தாக்குதலில், குழந்தைகள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுளளன.
மேலும், 80இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய மியான்மரின் சாங் யூ நகரில் மத நிகழ்வுக்காக நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்துள்ளனர்.
இதன்போது, மியன்மார் இராணுவத்தினர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
மியன்மாரில், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இராணுவ அரசு ஆட்சி செய்து வருகின்றது.
இதனால், இராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.