அவுஸ்திரேலியாவில் மூவரின் உயிரினை பறித்த காளான் சூப்

tamilni 43

அவுஸ்திரேலியாவில் மூவரின் உயிரினை பறித்த காளான் சூப்

காளான் சூப் சாப்பிட்டதால் ஏற்பட்ட சிக்கல்களால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த உணவை தயாரித்த எரின் பேட்டர்சன் என்ற பெண்ணை நேற்று (02.11.2023) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜூலை மாதம், விக்டோரியா நகரமான லியோன்காதாவில் மதிய உணவில் கலந்து கொண்டதன் பின்னர் நோய்வாய்ப்பட்ட நால்வரில் மூவர் உயிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்,உணவு அருந்திய மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எரின் பேட்டர்சன் குற்றமற்றவர் என்று தெரிவித்திருந்த போதிலும், அவர் விசாரிக்கப்பட உள்ளதாகவும், அவரது வீட்டில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version