கனடாவில் ஒரு நாளில் 4000த்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

covid cells

கனடாவில் ஒரு நாளில் 4000த்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனாத் தொற்றால் அதிகளவு பாதிப்பை எதிர்கொண்ட 28 ஆவது நாடாக காணப்படும் கனடாவில், இதுவரையில் 15 லட்சத்து ஏழாயிரத்து 53 பேர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 26 ஆயிரத்து 991 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 33 ஆயிரத்து 495 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 14 லட்சத்து 46 ஆயிரத்து 567 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Exit mobile version