கனடாவில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

corona death2

கனடாவில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, கொரோனாத் தொற்றால் மொத்தம் 27 ஆயிரத்து ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரையில் மொத்தம் 15 லட்சத்து 11 ஆயிரத்து 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த 24 மணித்தியாலத்தில் 4 ஆயிரத்து 159 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 34 ஆயிரத்து 656 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதுவரை 14 லட்சத்து 49 ஆயிரத்து 550 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Exit mobile version