மாலைத்தீவின் 8ஆவது ஜனாதிபதியாக பதவியேற்ற முகமது மூயிஸ்

tamilni 268

மாலைத்தீவின் 8ஆவது ஜனாதிபதியாக பதவியேற்ற முகமது மூயிஸ்

மாலைத்தீவின் 8ஆவது ஜனாதிபதியாக முகமது மூயிஸ் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.

மாலைத்தீவின் தலைமை நீதிபதி முதாசிம் அட்னன் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததோடு அவருடன் மாலைலத்தீவு துணை ஜனாதிபதியாக ஹுசைன் முகமது லத்தீப்பும் பதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்றதோடு தெற்காசிய நாடுகளின் பல தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக, மாலைத்தீவுடன் இருதரப்பு உறவுகளை ஆக்கப்பூர்வமாக எடுத்து செல்லும் வகையில் மாலைத்தீவுக்கான இந்திய தூதுவர் முனு மகாவர் பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்தியை முகமது முய்சுவிடம் நேரடியாக அளித்துள்ளார்.

Exit mobile version