அமெரிக்காவின் நியூ ஜெர்சி (New Jersey) மாகாணத்தில் ஹெமில்டன் நகருக்கு மேலே இரண்டு உலங்கு வானூர்திகள் (Helicopters) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு விமானி உயிரிழந்துள்ளார்.
நேற்று (28) காலை சுமார் 11:25 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) தகவலின்படி, விபத்துக்குள்ளான இரண்டு உலங்கு வானூர்திகளிலும் விமானிகள் மட்டுமே இருந்துள்ளனர். இரண்டு வானூர்திகளும் நடுவானில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
விபத்தின் தீவிரத்தால் ஒரு விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொரு வானூர்தியின் விமானி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வானூர்திகள் மோதிக்கொண்டதற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) இணைந்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.