தீவிரமடையும் இஸ்ரேல்- ஈரான் தாக்குதல்! ஈரான் அரசு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

25 684e82bc96fa6

ஈரான்(Iran) தலைநகர் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் தஞ்சமடைய, ஈரான் அரசு தனது அடித்தள மெட்ரோ நிலையங்கள், மசூதிகள் மற்றும் பள்ளிகளை 24 மணி நேரமும் (24/7) திறந்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அரசாங்க பேச்சாளர் பத்மே மொஹஜெரானி தனது டெலிகிராம் பதிவில் கூறியதாவது,

“இன்று இரவு முதல், மெட்ரோ நிலையங்களும் மசூதிகளும் பாதுகாப்பான இடங்களாக 24 மணி நேரமும் திறந்திருக்கும். மக்கள் பள்ளிகளையும் பாதுகாப்பான இடங்களாக பயன்படுத்தலாம்.

தெஹ்ரானின் நகர மன்றத் தலைவர் மெஹ்தி சாம்ரான் கூறுகையில்,

“தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் முழுமையாக தயார் செய்யப்பட்ட பாதுகாப்பு முகாம்கள் இல்லாத நிலைதான் உள்ளது.

எனவே, வாகன நிறுத்துமிடங்களும், உயரமான கட்டடங்களும் அவசர நிலைகளுக்குப் பயன்படுத்தத்தக்க இடங்களாக மாற்றப்படலாம்.

இஸ்ரேலின் இராணுவம் (IDF) வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரானிலிருந்து இஸ்ரேலுக்கு நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் (missiles) அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மேலும் அவை தடுக்கும் நடவடிக்கையாக ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது,

“ஹோம் ஃபிரண்ட் கமாண்டிலிருந்து எச்சரிக்கை வெளியிடப்பட்டதும், மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு உடனடியாக சென்று அங்கேயே தங்கியிருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியே வரக் கூடாது.” “பாதுகாப்பான இடத்திலிருந்து வெளியே வருவதற்கு, தெளிவான உத்தரவு வந்த பிறகு மட்டுமே அனுமதி உள்ளது,” என வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version