வெடித்துச் சிதறிய எரிமலை – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

1848228 erimalai 1 1

இந்தோனேசியாவில் 120-க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இங்கு யோக்கியகர்தா சிறப்பு மண்டல மாகாணத்தில் 2,968 மீட்டர் (9,721 அடி) உயரமுள்ள மெராபி எரிமலை நள்ளிரவு வெடித்துச் சிதறியது.

இதனைத்தொடர்ந்து அப்பகுதி கிராமவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து வெளியேறும் கரும்புகை சுமார் 7 கி.மீ. தூரத்திற்கு பரவும் எனவும், தீக்குழம்பும் வெளியேறி, சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு வழிந்தோடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலையில் இருந்து வெளிவரும் சாம்பல் அருகிலுள்ள கிராமங்களை மூழ்கடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த எரிமலை கடந்த 2010ம் ஆண்டு வெடித்த போது 350க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Exit mobile version