tamilni 155 scaled
உலகம்செய்திகள்

ஒன்றும் செய்யாமல் மேகனும், ஹரியும் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறார்கள்! கோல்டன் குளோப்பில் கிண்டல்

Share

புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருது விழாவில் மேகன் மெர்க்கல் கலந்துகொள்ளாதது குறித்து காரணம் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் Bevery Hills-யில் 81வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பேட்ரிக் ஜே.ஆடம்ஸ், ஜினா டோரஸ், சாரா ராபர்ட்டி மற்றும் கேப்ரியல் மாச்ட் ஆகியோர் விழா மேடையில் மீண்டும் இணைந்தனர்.

ஆனால், இளவரசி மேகன் மெர்க்கல் இவ்விழாவில் பங்கேற்கவில்லை. அவர் பிஸியாக இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், கோல்டன் குளோப் தரப்பில், ”நாங்கள் டச்சஸைக் கேட்டோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் முன்னதாகவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளால் வரமுடியாது என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.

எனினும் விழாவில் மேகன் ஒரு பரபரப்பு உரையாடலாக இருந்தார். அதாவது, தொகுப்பாளர் ஜோ கோயால் அவர்களை கேலி செய்தார்.

அவர் விருதுகளை பெற்ற Succession தொடர் குறித்து கூறும்போது, ‘Succession-க்கு 9 பரிந்துரைகள் உள்ளன. அது பணக்கார, வெள்ளை, செயலிழந்த குடும்பத்தைப் பற்றிய ஒரு சிறந்த தொடர்…ஓ! இருங்கள், அது தான் கிரீடம். மன்னிக்கவும். ஹரியும் மற்றும் மேகன் மெர்க்கல் ஒன்றும் செய்யாமல் மில்லியன் கணக்கில் பணம் பெற்றார்கள்; அதுவும் Netflix மூலம் தான்’ கிண்டலடித்தார்.

மேலும், மேகன் ஏதேனும் Suits Projects-யில் தோன்றுவாரா என்று கேட்டதற்கு, ”நிச்சயமாக. மைக் மற்றும் ரேச்சல் சியாட்டலில் இருக்கிறார்கள். அவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸிற்கு வர வேண்டும். அவர்கள் சில விடயங்களை சரி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

முன்னதாக, ஜினா டோரஸ் தங்களிடம் மேகனின் எண் எங்களிடம் இல்லை. ஆதலால் அவர் இதனை பார்ப்பார், விழாவை காண்பார், நாங்கள் இங்கே இருப்பதில் அவர் மகிழ்ச்சி அடைவார் என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...