4 14
உலகம்செய்திகள்

ரயிலில் Upper Berth Seat கீழே விழுந்ததால் பயணிக்கு நேர்ந்த சோக நிகழ்வு

Share

ரயிலில் Upper Berth Seat கீழே விழுந்ததால் பயணிக்கு நேர்ந்த சோக நிகழ்வு

விரைவு ரயில் ஸ்லீப்பர் பெட்டியில் மேல் படுக்கை கீழே விழுந்ததில் படுகாயமடைந்த பயணி உயிரிழந்துள்ளார்.

எர்ணாகுளம் – நிஸாமுதீன் விரைவு ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் கேரளாவைச் சேர்ந்த அலிகான் (62) என்பவர் மீது மேல் படுக்கை விழுந்ததில் கழுத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதாவது, கீழ் படுக்கையில் இருந்த அலிகான் மீது மேல் படுக்கை விழுந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், ரயில்வே நிர்வாகம் தரப்பில், நடு படுக்கை உடைந்து விழவில்லை என்றும், மற்றொரு பயணி சங்கிலி மாட்டாததால் நடு படுக்கை வேகமாக வந்து மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கேரளா காங்கிரஸ் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மோடி அரசின் கீழ் இப்படி தான் இருக்கிறது.

போதுமான ரயில்கள் அல்லது இருக்கைகள் இல்லை. நீங்கள் ரயிலில் ஏற நினைத்தால் இருக்கை இருக்காது. ரயிலில் உங்களுக்கு பாதுகாப்பு இருக்காது.

உங்களுக்கு இருக்கை இருந்தாலும் இருக்கை கீழே விழுந்து நீங்கள் கொல்லப்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...