பிரித்தானியாவில் 93 வயது மூதாட்டி கொலை வழக்கில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கார்ன்வாலில் உள்ள பியூட் நகரில் 93 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
செர்ரில் கார்டன்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காவல்துறை வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்திலேயே அந்த மூதாட்டி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதுடன், அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்தவர் என்றும், தற்போது காவல் துறையின் காவலில் இருப்பதாகவும் டெவோன் மற்றும் கார்ன்வால் காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை ஆய்வாளர் ராப் ஸ்மித் கூறுகையில், “கைது செய்யப்பட்டவருக்கும், உயிரிழந்த மூதாட்டிக்கும் பரஸ்பர அறிமுகம் இருந்ததாக நம்பப்படுகிறது” என்றார்.
மேலும், இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும், தற்போது வேறு எந்த சந்தேக நபர்களையும் காவல்துறை தேடவில்லை என்றும் அவர் உள்ளூர் மக்களுக்கு உறுதியளித்தார்.