எரியும் கட்டிடத்திலிருந்து குதித்த ஆணும் இளம்பெண்ணும்
உலகம்செய்திகள்

எரியும் கட்டிடத்திலிருந்து குதித்த ஆணும் இளம்பெண்ணும்

Share

எரியும் கட்டிடத்திலிருந்து குதித்த ஆணும் இளம்பெண்ணும்

ஜேர்மன் தலைநகர் பெர்லிலிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீப்பற்றிய நிலையில், அந்தக் கட்டிடத்திலிருந்து குதித்த இருவர் பலியாகினர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, பெர்லினில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றியது. அப்போது, அந்தக் கட்டிடத்திலுள்ள ஜன்னல் ஒன்றின் வழியாக இருவர் குதித்துள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக, குதித்த 45 வயது ஆண் மற்றும் 22 வயது பெண் என அந்த இருவருமே உயிரிழந்துவிட்டனர்.

கட்டிடம் தீப்பற்றிய உடனே இருவரும் மிக மிக விரைவாக குதித்ததாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

15 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தில் 12ஆவது தளத்தில் தீப்பற்றிய நிலையில், 12ஆவது தளத்திலிருந்து குதித்து அவர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த பெண் முதலில் குதித்ததாகவும், பால்கனியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த அந்த ஆண், பின்னர் பிடியை விட்டு கீழே விழுந்ததாகவும், முதல் தளத்தில் வாழும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த தீயைப் பற்றவைத்தவர்களே இந்த இருவர்தானோ என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. யார் அவர்கள் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், எப்படி தீப்பற்றியது, தீவைத்தது அவர்களா, என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...