வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிலுவையில் உள்ள ரூ.2.59 கோடி (இந்திய மதிப்பில்) இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தருவது அரசின் கடமை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நிலுவைத் தொகை வழங்க உத்தரவிட்டு ஓராண்டாகியும் வழங்காதது நீதிமன்ற அவமதிப்புச் செயல் என்றும் உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மிகுதி இழப்பீட்டுத் தொகை வழங்கியது குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

