லண்டன் ரயில் நிலையத்தில் தீ விபத்து!

1747908 london

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சவுத்வார்க் ரயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கொளுந்து விட்டு எரிந்த தீ, வாகனம் நிறுத்துமிடத்துக்கும் பரவியது. இதனால் ரயில் நிலையத்தில் இருந்து பல அடி உயரத்துக்கு கரும்புகை எழும்பியது.

இதையடுத்து தீயை அணைக்கும் பணியில் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் வேகமாக தீ பரவியதால் கட்டுப்படுத்த கடுமையாக போராடினர்.

ரயில் நிலையம் அருகே வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டு கதவு, ஜன்னல்களை மூடி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

நீண்ட நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்தால் ரயில் நிலையம் மூடப்பட்டது.

இதனால் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#world

Exit mobile version