பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ்

305100898 6386798141347728 6111160176632006999 n

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜோன்சன் அண்மையில் விலகினார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக உள்ளவரே, பிரதமர் பதவியை வகிக்க முடியும். இதன்படி, கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடந்து வந்தது.

இந்தத் தேர்தலில் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் இடையே போட்டி நிலவியது. தலைவர் பதவிக்கான தேர்தலின் கடைசி கட்டத்தில், கட்சி உறுப்பினர்கள், 1.60 லட்சம் பேர் வாக்களித்தனர். இதற்கான வாக்கு பதிவு கடந்த 2ஆம் திகதி நடந்தது.

இந்த தேர்தலின் வாக்கு முடிவுகள் இன்று 5 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். 47 வயதாகும் லிஸ் டிரஸ், பிரிட்டனின் 3 ஆவது பெண் பிரதமர் ஆவார்.

#SriLankaNews

Exit mobile version