24 665b3836c6991
உலகம்செய்திகள்

டொனால்ட் டிரம்ப்க்கு வாழும் நாஸ்ட்ராட்ராமஸால் எச்சரிக்கை

Share

டொனால்ட் டிரம்ப்க்கு வாழும் நாஸ்ட்ராட்ராமஸால் எச்சரிக்கை

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின்(Donald Trump) எதிர்காலம் பற்றி வாழும் நாஸ்ட்ராட்ராமஸ், குறிப்பிட்டுள்ளதோடு அவரை எச்சரித்தும் உள்ளார்.

அதாவது, டொனால்ட் டிரம்பின் எதிர்காலம் கணிக்க முடியாத வகையில் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபரான, டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட வழக்கு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைப்பதற்கு நடிகை ஒருவருக்கு 1.3 இலட்சம் டொலா் (சுமாா் ரூ.109 கோடி) வழங்கியதாக டிரம்ப் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பில் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நீதிபதி அறிவித்த நிலையில் ஜூலை 11ஆம் திகதி டிரம்ப்பிற்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாழும் நாஸ்ட்ராட்ராமஸ் என அறியப்படும் பிரேசில் நாட்டவரான Athos Salomé ட்ரம்பின் உடல் நலம் தொடர்பில் எச்சரித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தடுக்க நுரையீரல் ஆரோக்கியத்தை கண்காணிக்க வேண்டும் என்று டிரம்புக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மேல்முறையீடு வாய்ப்புகள் இருப்பதால், அதில் வெற்றிபெற்று சிறைத் தண்டனையில் இருந்து அவர் தப்பலாம் என்றும் அரசியலில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாகவும், 2026 டொனால்ட் டிரம்புக்கு முக்கியமான ஆண்டு எனவும் Athos Salomé கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...