பிரிட்டிஸ் மகாராணி கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தவேளை வின்ட்சர் கோட்டைக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்ற ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிசார் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த சனிக்கிழமை ஆபத்தான ஆயுதங்களுடன் 19 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உள்ளே நுழைய முயன்றார் . ஆனால் அவர் உள்ளே நுழைந்ததும் பாதுகாப்பு பொறிமுறைகள் உடனடியாக செயற்பட ஆரம்பித்தன.
இதனால் அவரால் கட்டிடங்கள் எவற்றிற்குள்ளும் நுழைய முடியவில்லை. சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார். அரசகுடும்பத்திற்கு இது குறித்து அறிவித்துள்ளோம்.
பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் தாக்குதலிற்கு பயன்படுத்தக்கூடிய ஆயுதத்தை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நபருக்கெதிரான வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.