உலகம்செய்திகள்

கூகுள் மீது சட்ட நடவடிக்கை – கடும் தொனியில் எச்சரிக்கும் பெண் ஜனாதிபதி

Share
15 14
Share

கூகுள் மீது சட்ட நடவடிக்கை – கடும் தொனியில் எச்சரிக்கும் பெண் ஜனாதிபதி

கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷேன்பாம் (Claudia Sheinbaum) எச்சரிகை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் மெக்சிகோ வளைகுடாவை (Gulf of Mexico) அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றம் செய்வதாக டிரம்ப் அறிவித்தார்.

மெக்சிகோ வளைகுடா பெயர் மாற்றம் குறித்து டிரம்ப் அறிவித்த சில நாள்களிலேயே கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றியது.

கடந்த வாரம் மெக்சிகோ பெயர் மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ விமானமான ஏர் ஒன் விமானத்தில் நியூ ஆர்லியன்ஸ் நகருக்குப் பயணித்தபோது இதற்கான ஆவணங்களில் ட்ரம்ப் கையெழுத்திட்ட காணொளி வெளியாகி இருந்தது.

இருப்பினும், இந்த பெயர் மாற்றமானது கூகுள் நிறுவனத்தின் அமெரிக்க பயனர்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டது.

மெக்சிகோ வளைகுடாவில் கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடா என்றும், அமெரிக்காவில் அமெரிக்க வளைகுடா என்றும், இதர நாட்டில் கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடா (அமெரிக்க வளைகுடா) என்றும் கூகுள் நிறுவனம் பெயர் மாற்றம் செய்துள்ளது.

இதையடுத்து, ”கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றிய காரணத்தால் கூகுள் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷேன்பாம் தெரிவித்துள்ளார்.

மேலும், “சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க கூகுள், தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...