அள்ள அள்ள கிடைக்கும் தங்கம், வெள்ளி – உலகின் பெரிய கனிமபடிவு கண்டுபிடிப்பு

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 6

தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைகளில் மிகப்பெரிய கனிமபடிவு கண்டறியப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை நாளுக்குநாள், ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, சாமானியர்கள் தங்கம் வாங்குவது எட்டாக்கனியாக மாறி வருகிறது.

அதேவேளையில், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்க படிவுகளும் கண்டறியப்பட்டு வருகிறது.

தற்போது தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைகளில், தங்கம், வெள்ளி, செம்பு அடங்கியுள்ள ஒரு பெரிய கனிமபடிவம் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில், புவியியலாளர்கள் கண்டறிந்த மிகப்பெரிய செம்பு, தங்கம் மற்றும் வெள்ளி வைப்புகளில் ஒன்றாக இது உள்ளது.

அர்ஜென்டினாவின் சான் ஜுவான் மாகாணம் மற்றும் சிலியின் அட்டகாமா பிராந்தியத்தின் எல்லையில், விகுனா கனிம வளம் என்று அழைக்கப்படும் இந்த தளம் அமைந்துள்ளது.

இங்கு, 13 மில்லியன் டன் செம்பு, 32 மில்லியன் அவுன்ஸ் தங்கம் மற்றும் 659 மில்லியன் அவுன்ஸ் வெள்ளி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வர்த்தகத்தைத் அதிகரிப்பதால், அர்ஜென்டினா மற்றும் சிலியின் பொருளாதாரம் பெரிய அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார வாய்ப்புகள் இருந்தபோதிலும், ஆண்டிஸ் மலைத்தொடர் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த ஒரு பகுதியாகும், சுரங்க நடவடிக்கைகளால் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளன.

மேலும், அந்த பகுதியில் உள்ள பழங்குடி சமூகங்கள் தங்கள் நிலம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பது குறித்து கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன.

Exit mobile version