ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

15 28

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர்.

குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட குடியுரிமைகளை ரத்து செய்துள்ளது. இதில் பெரும்பாலானோர் பெண்களாவர்.

பல ஆண்டுகளாக குவைத்தை தங்கள் நாடாக வாழ்ந்துவந்த இவர்கள், ஒரே இரவிலேயே நாடற்றவர்களாக மாறியுள்ளனர்.

இந்த நடவடிக்கையை குவைத் புதிய ஆட்சி தலைவர் எமீர் ஷேக் மெஷால் அல்அஹ்மத் அல்-சபாஹ் ஆரம்பித்துள்ளார்.

இவர் அதிகாரத்தில் வந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு, சட்டமன்றத்தை கலைத்ததோடு, சில அரசியலமைப்புச் சட்டங்களையும் நிறுத்திவைத்தார்.

அதன் ஒரு பகுதியாக, “உண்மையான குவைத் மக்களுக்கே நாடு சொந்தம்” என அறிவித்து, இந்த குடியுரிமை நீக்க நடவடிக்கையை அறிமுகப்படுத்தினார்.

1987 முதல் திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள், இரட்டை குடியுரிமை வைத்தவர்கள் மற்றும் போலியான ஆவணங்களின் மூலம் குடியுரிமை பெற்றவர்கள் இந்நடவடிக்கையின் முக்கிய பாதிப்பாளர்கள் ஆவர்.

தனிப்பட்ட சாதனைகளுக்காக குடியுரிமை பெற்ற பிரபலங்கள் – பாடகி நவால் மற்றும் நடிகர் தாவூத் ஹுசைன் ஆகியோரும் இழந்துள்ளனர்.

“குடியுரிமை என்பது அடிப்படை மனித உரிமை. அதனை இழக்கும்போது வாழ்வில் பெரும் பின்னடைவு ஏற்படும்” என Amnesty International அமைப்பைச் சேர்ந்த மன்சூரே மில்ஸ் கவலை தெரிவித்துள்ளார்.

 

 

Exit mobile version