துருக்கியின் அரசாங்கங்களுக்கு எதிராக, 40 ஆண்டு காலமாக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குர்தீஸ் கிளர்ச்சியாளர்கள், தமது ஆயுத போராட்டத்தை கைவிட்டு, அமைதி வழியில் திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளனர்.
குர்தீஸ் தொழிலாளர் கட்சி அல்லது பி.கே.கே., என கூறிக் கொள்ளும் குர்தீஸ் கிளர்ச்சியாளர்கள், 1984ல் இருந்து ஆயுதப்போராங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், குர்திஸ் குழுவை பயங்கரவாத அமைப்பாக கருதி துருக்கி மற்றும் மேற்கத்திய நாடுகள் தடை செய்துள்ளன.
அந்தக்குழுவின் தலைவர் அப்துல்லா ஒக்லான், 1999ல் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.எனினும் குர்தீஸ் கிளர்ச்சியாளர்கள் குழு தமது போராட்டத்தை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.
சிறையில் இருக்கும் அப்துல்லாவை, அண்மையில் துருக்கி அரசியல் தலைவர்கள் சந்தித்து, வன்முறையை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து கடந்த மார்ச்சில் போர் நிறுத்தத்தை குர்தீஸ் கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். இந்தநிலையிலேயே ஈராக்கில் நடந்த நிகழ்வு ஒன்றில், குர்தீஸ் தொழிலாளர் கட்சி, தமது ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அரசியலை முன்னெடுத்து, துருக்கியுடன் அமைதி வழியில் குர்தீஸ் இன மக்களின் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று குர்திஸ் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.