tamilni 258 scaled
உலகம்செய்திகள்

“எங்கள் பிரதான எதிரி தென் கொரியா” – கிம் ஜாங் உன்

Share

“சுப்ரீம் பீபிள்’ஸ் அசெம்பிளி” எனும் வட கொரிய பாராளுமன்றத்தில் கிம் உரையாற்றினார். அதில் தென் கொரியாவுடனான உறவு குறித்து கருத்து தெரிவித்தார்.

அப்போது கிம் கூறியதாவது:

தென் கொரியாதான் எங்கள் முதல் எதிரி. ஒரு வேளை போர் தேவைப்பட்டால் அதை தவிர்க்க கூடாது.

தென் கொரியாவுடன் இணைப்புக்கு இனி சாத்தியமில்லை.

வட கொரியாவிற்கு பிரதான எதிரி தென் கொரியாதான் என வலியுறுத்தும் வகையில் வட கொரிய மக்களுக்கு கற்பிக்க வேண்டும். இதற்காக தேவைப்பட்டால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்.

இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைகள் சரியான முறையில் வரையறுக்கப்பட வேண்டும்.

நாம் போரை விரும்பவில்லை; ஆனால், தேவைப்பட்டால் ஈடுபட தயங்கவே கூடாது.

தென் கொரியா முழுவதையும் ஆக்கிரமிக்க வட கொரியா தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் நமது உடன்பிறப்புகள் அல்ல.

இரு நாடுகளுக்கிடையேயான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்படுத்த முனைந்து வந்த 3 அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு கிம் தடை விதித்துள்ளார்.

கிம் ஜாங் உன் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்வினையாக, “வட கொரியா தாக்குதலில் ஈடுபட்டால், பல மடங்கு வலிமையுடன் எதிர் தாக்குதலில் ஈடுபடுவோம்” என தென் கொரியா தெரிவித்தது.

தென் கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வலுப்பெற்று வரும் உறவை கண்டு கிம் அச்சப்படுவதாக சில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...

04 22
உலகம்செய்திகள்

மழைக்கும் மத்தியிலும் ஈரான் தலைநகரில் பிரம்மாண்டப் போராட்டம்: உச்சத் தலைவருக்கு ஆதரவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் இன்று (மார்ச் 24, 2026)...

03 23
செய்திகள்இலங்கை

சீமெந்து விலை 2,250 ரூபாவாக அதிகரிப்பு: கட்டுமாணத் துறை மேலும் நெருக்கடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கட்டுமாணப் பொருட்களின் விலைகள் மீண்டும்...