ஜேர்மனியில் காணாமல்போன கேரள மாணவர்: வெளியாகியுள்ள துயரச் செய்தி

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 8

செவிலியர் பயிற்சிக்காக ஜேர்மனிக்கு வந்த கேரள இளைஞர் ஒருவர் கடந்த வாரம் காணாமல் போனார்.

கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்தவர் அமல் ராய் (22). ஜேர்மனியிலுள்ள Ulm நகரில் முதலாமாண்டு செவிலியர் பயிற்சி பயின்றுவந்தார் அமல்.

இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 23ஆம் திகதி கடைசியாக தனது குடும்பத்தினரை மொபைலில் தொடர்புகொண்டு பேசினார். அதற்குப் பிறகு அவரைக் காணவில்லை.

இந்நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

அமலின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு செல்லும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.

அமல் எப்படி இறந்தார் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Exit mobile version