களத்திற்கு நேரடி விஜயம் செய்யும் ஜோ பைடன்

24 66086b1738d94

களத்திற்கு நேரடி விஜயம் செய்யும் ஜோ பைடன்

அமெரிக்காவில் கப்பல் மோதி பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச அடுத்த வாரம் பால்டிமோர் செல்ல உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து, குப்பைகளை அகற்றுவதற்காக கிழக்கு அமெரிக்க கடற்கரையில் உள்ள மிகப்பெரிய கிரேன் பால்டிமோர் கொண்டு வரப்பட்டது.

அதன்படி, இந்த கிரேன் மூலம் உரிய குப்பைகள் கொண்டு செல்லப்படுகிறது. நாட்டின் பரபரப்பான துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இடிபாடுகளில் மூழ்கும் அபாயம் உள்ளதால் நான்கு தொழிலாளர்களின் உடல்களை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாலத்தை மீட்டெடுக்க 60 மில்லியன் டாலர் மத்திய அரசின் அவசர நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாலம் இடிந்து விழுந்ததற்கான காப்பீட்டுத் தொகை 3 பில்லியன் டாலரைத் தாண்டும் என்றும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 3,000 அல்லது 4,000 தொன் இரும்புகள் கொண்ட பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ள கப்பலை அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Exit mobile version