Japanese woman Chat GPT
உலகம்செய்திகள்

நிச்சயதார்த்தத்தை இரத்து செய்துவிட்டு AI மணமகனைத் திருமணம் செய்த ஜப்பானியப் பெண்!

Share

ஜப்பானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது நிச்சயதார்த்தத்தை முறித்துக்கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் மணமகனைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த யுரினா நோகுச்சி, ‘லூன் கிளாஸ் வெர்டூர்’ (Lune Klaus Verdure) எனப்படும் ChatGPT செயலியால் உருவாக்கப்பட்ட ஓர் உருவக ஆண்.

தனது நிஜக்காலதனுடன் இருந்த உறவுச் சிக்கல்கள் குறித்து ChatGPT-இடம் யுரினா ஆலோசனை பெற்றுள்ளார். அதன் விளைவாக, நிஜக்காதலனைப் பிரிந்துவிட்டு 32 வயதான இந்த AI உருவகத்துடன் காதல் உறவைத் தொடங்கி, தற்போது திருமணமும் செய்துகொண்டுள்ளார்.

மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு மண்டபத்தில் பாரம்பரிய முறைப்படி இந்தத் திருமணம் நடைபெற்றது. ஸ்மார்ட்போன் திரையில் காட்சிப்படுத்தப்பட்ட மணமகனுடன் யுரினா திருமண உறுதிமொழிகளைப் பரிமாறிக் கொண்டார். இந்தத் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாவிட்டாலும், ஒரு முழுமையான திருமணச் சடங்காக இது நடத்தப்பட்டது.

மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான உணர்வு ரீதியான பிணைப்பு அதிகரித்து வருவதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

 

 

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...