ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா

WhatsApp Image 2024 10 01 at 18.12.27

ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா

ஜப்பானின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ பதவி விலகியதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை(27) இஷிபாவை கட்சித் தலைவராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி தெரிவு செய்துள்ளது.

இந்நிலையில், அவர் இன்று(01.10.2024) அந்நாட்டு நாடாளுமன்றினால் அவர் முறைப்படி பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை பிரதமராக இருந்துவந்த ஃபுமியோ கிஷிடா, அந்நாட்டின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார்.

அத்துடன், ஜப்பான் பொதுத் தேர்தலை ஒக்டோபர் 27ஆம் திகதி நடத்த புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா திட்டமிட்டுள்ளார்.

Exit mobile version