கமலின் விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் ஜெயிலர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மாபெரும் எதிர்பார்ப்பில் கடந்த வாரம் வெளிவந்து வசூலில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது கமலின் விக்ரம் படத்தின் வசூல் சாதனையை ரஜினியின் ஜெயிலர் முறியடித்துள்ளது.

ஆம், ஜெயிலர் திரையப்படல் கேரளாவில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்து விக்ரம் படம் செய்த வசூல் சாதனையை முறியடித்துள்ளது

இதன்மூலம் கேரளாவில் அதிகம் வசூல் செய்த நம்பர் 1 திரைப்படம் ஜெயிலர் என்ற பெயரையும் எடுத்துள்ளது.

Exit mobile version