23 65180ae426d5e
உலகம்செய்திகள்

சிறுபிள்ளைத்தனமாக உள்ளது… கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து

Share

சிறுபிள்ளைத்தனமாக உள்ளது… கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து

கனடா பிரதமரின் குற்றச்சாட்டுகள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து
கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக ட்ரூடோ குற்றம் சாட்டினாலும், இதுவரை அதற்கான எந்த ஆதாரங்களையும் அவர் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில், ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். தீவிரப் போக்கு கொண்டவர்கள் வெறும் இரண்டு சதவிகிதத்தினர்தான் கனடாவில் இருக்கிறார்கள். மற்ற சீக்கியர்கள் அப்படிப்பட்டவர்களல்ல என்கிறார் கனடாவில் வாழும் இந்தியரான Amandeep Singh Chabba.

கனேடிய பிரதமர் உறுதியான ஆதாரங்களை அளித்திருக்கவேண்டும். அவருடைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் இந்தியா கனடா உறவுகளில் பிரிவும் பிளவும் ஏற்பட்டுள்ளன என்கிறார் அவர்.

கனடாவில் வாழும் மற்றொரு இந்தியரான Dr Raj Jagpal என்பவர், கனடா அரசு கனடாவில் வாழும் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையில் பிரிவினையை உண்டாக்குகிறது. இது மிகவும் தவறு. ட்ரூடோ ஒன்றில் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் அல்லது ராஜினாமா செய்யவேண்டும்.தேர்தலில் வாக்குகள் கிடைப்படதற்காக அரசு பிரிவினையை உண்டாக்குகிறது என்கிறார்.

கனடாவில் வாழும் பல சீக்கியர்கள் இதேபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...