download 1 1 1
உலகம்செய்திகள்

பள்ளம் தோண்டி விளையாடிய இளைஞர் உயிருடன் புதைந்த பரிதாபம் !

Share

பள்ளம் தோண்டி விளையாடிய இளைஞர் உயிருடன் புதைந்த பரிதாபம் !

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் மணல் மேட்டில் பள்ளம் தோண்டி விளையாடிய இளைஞர் ஒருவர் உயிருடன் புதைந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ள கடற்கரை மணல் மேட்டில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வர்ஜீனியாவை சேர்ந்த 17 வயது பெயர் குறிப்பிடப்படாத இளைஞரே, பள்ளத்தில் உயிருடன் புதைந்து மரணமடைந்தவர்.

மே 7ம் திகதி மதியம் சுமார் 2 மணியளவில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து இளைஞரை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு, மீட்பு வீரர்கள் தரப்பு தீவிரமாக களமிறங்கினர்.

இந்த நிலையில், பள்ளத்தில் மிக ஆழத்தில் அந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. மேலும், குறித்த இளைஞருக்கு உயிர் காக்கும் முதலுதவிகள் மேற்கொண்ட பிறகும் காப்பாற்ற முடியாமல் போனதாக தெரிவித்துள்ளனர்.

இளைஞர் புதைந்து போன பள்ளமானது வெளியே தெரியாத வகையில் இருந்துள்ளது எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், கடற்கரையில் ஆழமான பள்ளங்கள் எதுவும் மக்கள் தோண்ட வேண்டாம் எனவும், ஆபத்தில் முடியலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...