ஏமனின் ஹவுதிப்படையினாரால் (Houthi ) ஏவப்பட்ட ஏவுகணை, இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதனால் அப்பகுதியில் புகை சூழ்ந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்ததாக இஸ்ரேலின் தேசிய அவசர சேவையை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினரால், குறித்த ஏவுகணையை தடுப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொண்ட போதும் அவை வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விமான நிலையத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஹவுத்திகள் நடத்தும் நான்காவது ஏவுகணைத் தாக்குதல் இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.