24 66f8ce3f915ac 2
உலகம்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம் – லெபனானில் தரை வழி தாக்குதலை தொடங்கும் இஸ்ரேல்

Share

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம் – லெபனானில் தரை வழி தாக்குதலை தொடங்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் (Israel) எல்லைக்கு அருகில் உள்ள லெபனானில் (Lebanon) ஹிஸ்புல்லா (Hezbollah) உள்கட்டமைப்பைக் குறி வைத்து தரை வழி தாக்குதலை மேற்கொள்வதாக இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இத்தனை நாட்கள் வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல் இப்போது தரை வழி தாக்குதலைத் தொடங்குவது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காசாவில் (Gaza) உள்ள ஹமாஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் பல மாதங்களாக தொடர்ந்து வருகிறது.

லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடாத்திய போது ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.

அடுத்த கட்டமாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தரை வழி தாக்குதலை மேற்கொள்ள இருப்பதாகவும் இதை இஸ்ரேல் தரப்பே தங்களிடம் தெரிவித்ததாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இத்தனை நாட்கள் வான்வழித் தாக்குதலை மட்டுமே இஸ்ரேல் நடத்தி வந்த நிலையில், தரை வழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்குவது மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்காவின் (United States) வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “எல்லைக்கு அருகில் உள்ள ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்ட தாக்குதலை நடத்துவதாக அவர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர்.

அவை சிறியளவிலான தரை வழி தாக்குதலாக இருக்கும் என்பதே எங்கள் புரிதல் என குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் இதுபோல பல திசைகளில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், நேரடியாக ஈரான் இதில் தலையிட வேண்டும் என்ற குரல்களும் ஈரானில் எழுந்துள்ளது.

இதுவரை இதில் ஈரான் நேரடியாகத் தலையிடாத நிலையில், அவர்கள் உள்ளே வந்தால் இது மிகப் பெரிய போராக மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 15
உலகம்செய்திகள்

ஈரானின் திடீர் முடிவு.. சர்வதேசத்திடமிருந்து அணுசக்தி தகவல்களை மறைக்க திட்டம்!

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான ஒரு சட்டத்திற்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்...

Murder Recovered Recovered Recovered 11
உலகம்செய்திகள்

தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விபத்துக்குள்ளான சோமாலிய விமானம் : மூவர் பலி

சோமாலியாவில் ஆபிரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

Murder Recovered Recovered Recovered 10
உலகம்செய்திகள்

கனடா பெண்ணுக்கு யாழில் நேர்ந்த சோகம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம்(02) உயிரிழந்துள்ளார். கண்டி...

Murder Recovered Recovered Recovered 8
உலகம்செய்திகள்

இந்தோனேசியாவில் படகு மூழ்கியதில் 38 பேர் மாயம்

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற பயணிகள் படகு மூழ்கியதில் 38 பேர்...