இஸ்ரேல் – ஹமாஸ் போர்! மேக்ரொன் இஸ்ரேல் விஜயம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் இன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல்- ஹமாஸ் போர் உக்கிரமடைந்துவரும் நிலையில், இஸ்ரேலுக்கு தனது முழு ஆதரவை தெரிவிக்கும் வகையில் டெல் அவிவிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் சென்றுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் இஸ்ரேல் விஜயங்களைத் தொடர்ந்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரானின் பயணம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் சென்றடைந்த பிரான்ஸ் ஜனாதிபதியை தூதரக அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.
மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி இஸ்ரேல் பிரதமரை சந்திப்பதுடன் பலஸ்தீன தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய 17 வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளது.