பழமொழி கூறி நாட்டின் அதிபரை அவமதித்ததாகக் தெரிவித்து பிரபல பெண் பத்திரிகையாளர் செடப் கபாஸ் என்பவரை துருக்கி நீதிமன்றம் சிறையில் அடைத்துள்ளது .
“முடிசூடிய தலை அறிவுள்ளதாக மாறிவிடுகிறது என்றொரு பழமொழி உள்ளது. இது உண்மையல்ல என்பதை நாம் பார்த்துவருகிறோம்,” என்று எதிர்க்கட்சியோடு தொடர்புடைய தொலைக்காட்சி ஒன்றில் நேரலையில் பேசும்போது அவர் கூறியுள்ளார்.
மேலும் “அரண்மனைக்குள் நுழைந்துவிடுவதால் மட்டுமே ஒரு மாடு மன்னனாகிவிடுவதில்லை. உண்மையில் அரண்மனைதான் அதனால் கொட்டடியாகிவிடும்,” என்றும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து துருக்கி நீதிமன்றம் விசாரணைக்கு முதலே அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு முதல் 4 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அவருக்குக் கிடைக்கலாம்.என்று தெரிவிக்கப்படுகின்றது.
Leave a comment