ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு, ஷியா தலைவர் முக்தாதா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர்.
ஈராக் பிரதமர் பதவிக்கு முகமது அல்-சூடானி நியமிக்கப்பட்டதை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றது.
பிரதமர் வேட்பாளராக உள்ள முகமது ஈரானுக்கு மிகவும் நெருக்கமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தில் பாட்டு பாடியும், நடனமாடியும் அங்குள்ள மேஜைகளில் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்.பி.க்கள், உறுப்பினர்கள் யாரும் வளாகத்தில் இல்லை, பாதுகாப்பு பணியில் உள்ள படையினர் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில், பிரதமர் முஸ்தபா, ‘போராட்டத்தை உடனடியாக போராட்டத்தை கைவிடுமாறு’ கேட்டுக்கொண்டார். மேலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பாதுகாத்துக் கொள்ளுமாறு படையினருக்கு உத்தரவிட்டார்.
போராட்டக்காரர்களை தடுக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகள் போன்றவற்றை பயன்படுத்தி தடுக்க முயன்றனர். எனினும் அவற்றை எல்லாம் தாண்டி அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தனர்.
#World