25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

Share

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பயா (Baya), ஜாபர் (Jafar) மற்றும் கோவ்சர் (Kowsar) ஆகிய மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களே இவ்வாறு ஒரே ராக்கெட் மூலம் செலுத்தப்படவுள்ளன.

இது குறித்து, ஐ.எஸ்.ஏ எனப்படும் ஈரான் விண்வெளி அமைப்பின் (Iran Space Agency – ISA) தலைவர் ஹசன் சலாரியே கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகள் விதித்த பல்வேறு தடைகள் இருந்த போதும், விண்வெளித் திட்டத்தில் பெரிய முன்னேற்றங்களை ஈரான் கண்டுள்ளது.”

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயா, ஜாபர் மற்றும் கோவ்சர் ஆகிய மூன்று செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இந்தச் செயற்கைக்கோள்கள் விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை தொடர்பான தரவுகளை வழங்கும். இதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...