14 1
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு அடுத்த அடி : நான்காவது F-35 போர் விமானத்தை வீழ்த்தியது ஈரான்

Share

ஈரானிய(iran) ஆயுதப் படைகளின் வான் பாதுகாப்பு அமைப்பு, வடமேற்கு ஈரானின் தப்ரிஸில் இஸ்ரேலிய F-35 போர் விமானத்தை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக கிழக்கு அஜர்பைஜான் நெருக்கடி மேலாண்மை பணிப்பாளர் ஜெனரல் மஜித் ஃபர்ஷி தெரிவித்துள்ளார்.

தப்ரிஸில் இரண்டு இஸ்ரேலிய ட்ரோன்கள் முன்னதாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தப்ரிஸைச் சுற்றியுள்ள மூன்று இடங்கள் செவ்வாயன்று குறிவைக்கப்பட்டதாகவும், இஸ்ரேலிய ட்ரோன்களை(MAVs) வீழ்த்துவதற்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இது ஈரானின் வான் பாதுகாப்புப் படைகளால் இடைமறித்து அழிக்கப்பட்ட நான்காவது F-35 போர் விமானமாகும்.

ஜூன் 13 அன்று இரவு ஈரானிய எல்லைக்குள் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியது. உயர் பதவியில் இருந்த ஈரானிய இராணுவ அதிகாரிகள் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டனர்.

ஈரானின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதிகளின் தலைவர் மேஜர் ஜெனரல் முகமது பாகேரி மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி ஆகியோர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட மூத்த இராணுவ அதிகாரிகளில் அடங்குவர்.

Share

Recent Posts

தொடர்புடையது
432e7679 1282 465e 9bbd 9fff0c004877
இலங்கைசெய்திகள்

மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் கைதான 5 இலங்கையர்கள் 30 நாட்கள் தடுப்புக் காவலில்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்!

355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட...

th
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாகப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது: மன்னார் குடும்பஸ்தர் தனுஷ்கோடியில் பிடிபட்டார்!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர்...

Untitled design 2
செய்திகள்அரசியல்இலங்கை

பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...