அமெரிக்காவின் சரக்கு கப்பலை கைப்பற்றிய ஈரான்

tamilnaadi 23

அமெரிக்கா- ஈரான் இடையே மோதல் காணப்படுகின்ற நிலையில் அமெரிக்க சரக்கு கப்பலை ஈரான் கைப்பற்றியுள்ளது.

ஓமான் நாட்டின் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான ‘செயின்ட் நிக்கோலஸ்’ என்ற சரக்கு கப்பலையே இவ்வாறு ஈரான் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் ஈரான் இராணுவம் தெரிவிக்கையில், “சூயஸ் ராஜன் என்று பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் உத்தரவின்படி ஈரான் சரக்கு கப்பலில் இருந்து எண்ணெயை திருடியது.

ஈரானிய எண்ணெய் பின்னர் அமெரிக்க துறைமுகங்களுக்கு மாற்றப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதற்கு பதிலடியாக ஓமான் கடலில் எண்ணெய் ஏற்றிச் சென்ற அமெரிக்காவின் செயின்ட் நிக்கோலஸ் சரக்கு கப்பலை ஈரான் கடற்படை கைப்பற்றியுள்ளது” என கூறியள்ளது.

மேலும், நீதிமன்ற உத்தரவின்படி அமெரிக்க கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

Exit mobile version