ஈரானின் புதிய பதில் ஜனாதிபதி தொடர்பில் அறிவிப்பு

24 664ae743ef3e9

ஈரானின் புதிய பதில் ஜனாதிபதி தொடர்பில் அறிவிப்பு

ஈரானின் பதில் ஜனாதிபதியாக அந்நாட்டு துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர்(Mohammad Mokhber) பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலங்கு வானூர்தி விபத்தில் ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi) உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படும் நிலையில் பதில் ஜனாதிபதியாக முஹம்மது முக்பர் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நாட்டின் ஆன்மீகத் தலைவரின் ஒப்புதலின் அடிப்படையில் அவர் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஈரானிய அரசியலமைப்பின்படி புதிய ஜனாதிபதியை 50 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்தநிலையில், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நீதித்துறை தலைவர் ஆகியோருடன் இணைந்து இன்னும் 50 நாட்களுக்குள் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டியது முஹம்மது முக்பரின் கடமையாகும்.

Exit mobile version