24 664a99327a9bb
உலகம்செய்திகள்

ரைசியின் விபத்து ஈரான் மக்களுக்கு கிடைத்த நற்செய்தி?

Share

ரைசியின் விபத்து ஈரான் மக்களுக்கு கிடைத்த நற்செய்தி?

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் ஆபத்தான தரையிறக்கத்தை சந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க செனட்டரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் அஜர்பைஜான் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் மோசகமாக தரையிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திடீர் விபத்தை தொடர்ந்து ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நலம் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இது உலக அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, ஜூன் 2021 ல் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதியாக தெரிவாகும் முன்பே ஈரானில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஈரான் ஜனாதிபதி ரைசின் பயணித்த ஹெலிகாப்டரில் ஏற்பட்ட விபத்தை வரவேற்கும் விதமாக அமெரிக்க குடியரசுக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிக் ஸ்காட் பரபரப்பான கருத்து ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “ரைசி யாராலும் நேசிக்கப்படவில்லை அல்லது மதிக்கப்படவில்லை, அவர் இறந்தால் யாரும் வருத்தப்பட மாட்டார்கள். அவர் மறைந்தால், கொலைகார சர்வாதிகாரிகளிடமிருந்து தங்கள் நாட்டை மீட்டெடுக்க ஈரானிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டார்.

ஸ்காட்டின் கருத்துக்கள் மத்திய கிழக்கில் உள்ள பல அமெரிக்க கூட்டாளிகள் உட்பட, ரைசியின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவிக்கும் ஏராளமான வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் நாடுகளின் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்டவை.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...