ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழப்பு: ஈரான் அரச ஊடகம் தகவல்

24 66264764a2ca5

ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழப்பு: ஈரான் அரச ஊடகம் தகவல்

உலங்கு வானூர்தி விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சரும் உயிரிழந்துள்ளதாக அரசுடன் தொடர்புடைய செய்தி நிறுவனமான MEHR தெரிவித்துள்ளது.

ஈரானிய அதிபர் உட்பட்டவர்களை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த அரச ஊடகமானது உயிரிழந்தவர்களின் விபரங்களை வெளியிட்டுள்ளது.

அயதுல்லா செய்யத் இப்ராஹிம் ரைஸ் அல் சதாதி அயதுல்லாஹ் செய்யத் முஹம்மது அலி அல்-ஹாஷிம் வைத்தியர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் வைத்தியர் மாலிக் ரஹ்மதி சர்தார் செயத் மெஹ்தி மௌசவி அன்சார் அல்-மஹ்தி கார்ப்ஸ் (அடையாளம் தெரியவில்லை) பைலட் (அடையாளம் தெரியவில்லை) விமானியின் உதவி, (அடையாளம் தெரியவில்லை) க்ருச்சேவ் (அடையாளம் தெரியவில்லை)

ரைசி இறந்துவிட்டார் என்பதற்கு இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை, ஆனால் விபத்து நடந்த இடத்தில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்புக்கள் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Exit mobile version