5 10
உலகம்செய்திகள்

அடுத்தகட்ட தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்! அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த பெஞ்சமின் நெதன்யாகு

Share

அமெரிக்காவை தாக்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணையை ஈரான் உருவாக்கிவருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, Ben Shapiro-வுடன் நடத்திய நேர்காணலிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“ஈரான் 8,000 கி.மீ. தூரம் செல்லக்கூடிய ICBM ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. மேலும், 3,000 கி.மீ. சேர்த்தால் அமெரிக்காவின் கிழக்கு கரையை அடைய முடியும்” என எச்சரித்துள்ளார்.

“அமெரிக்காவின் நியூயார்க், பாஸ்டன், வாஷிங்டன், மியாமி போன்ற நகரங்களை அணு ஆயுதங்களால் மிரட்டும் நிலைக்கு ஈரான் வருகிறது.

“அமெரிக்காவிற்கு மரணம்’ என கோஷமிடுபவர்கள் ஏவுகணை ஆயுதங்களை வைத்திருப்பது மிகப்பெரிய அபாயம்” என்றும், இஸ்ரேல் அந்த அபாயத்தை தடுக்கும் பணியில் சிறப்பாக செயல்படுகிறது.

மேலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் முக்கியத்துவத்தை நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் உருவாக்கும் பாதுகாப்பு ஆயுதங்கள் உலகிலேயே மிக மேம்பட்டவை.

இவை அமெரிக்காவுடன் பகிரப்பட்டுள்ளன. ISIS மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளால் ஏற்படும் விமான தாக்குதல்களை இஸ்ரேல் புலனாய்வு தடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

காசா போர் குறித்து பேசுகையில், “இது முடிவடையும் நிலையில் உள்ளது. ஆனால், ஹமாஸ் ஆட்சி தொடரும் வரை நிச்சயமாக முடிவடையாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...