23 657d7a661353d md
உலகம்செய்திகள்

இஸ்ரேல் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு… மரண தண்டனையை நிறைவேற்றிய நாடு

Share

இஸ்ரேல் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு… மரண தண்டனையை நிறைவேற்றிய நாடு\

இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறையுடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு சனிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக ஈரான் தகவல் வெளியிட்டுள்ளது.

ஈரானின் தென்கிழக்கு சிஸ்தான்-பாலுசெஸ்தான் மாகாணத்தில் சனிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் அந்த தொடர்பில் இருந்தார் என்றும், குறிப்பாக இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறையுடன் அவருக்கு தொடர்புள்ளது என்றும்.
முக்கியமான தரவுகளை திரட்டி மொசாத் உள்ளிட்ட வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு அவர் கைமாறியுள்ளார் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஈரானுக்கு எதிரான குழுக்கள் மற்றும் அமைப்புகளுக்கு பிரச்சாரம் செய்யும் நோக்கில் ஒரு மொசாத் அதிகாரியிடம் இரகசிய தகவல்களை கையளித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் அந்த நபர் எப்போது கைதானார் அல்லது அவரது பெயர் உள்ளிட்ட தகவல்கள் எதையும் ஈரான் அதிகாரிகள் வெளியிட மறுத்துள்ளனர். தொடர்புடைய நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட Zahedan சிறையில், மூன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும்,

பலுச் போராளிகள் குழு ஒன்று மாகாணத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தைத் தாக்கிய சம்பவத்தில் 11 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயங்கலுடன் தப்பிய சம்பவத்திற்கும் ஒரு நாளுக்கு பின்னர் மொசாத் தொடர்புடைய நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
04 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புல்மோட்டையில் சட்டவிரோத டீசல் விற்பனை: 390 லீற்றர் எரிபொருளுடன் வர்த்தகர் கைது!

புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்யப்படுவதாக புல்மோட்டை...

03 4
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி மோசடி: 1.8 பில்லியன் ரூபா நிதி இழப்பு – PUCSL அறிக்கை!

சர்ச்சைக்குரிய ஒன்பது நிலக்கரி கப்பல்களின் இறக்குமதி தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

02 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி கடற்பரப்பில் ஈரானிய கப்பல் விபத்து: மீட்புப் பணியில் இலங்கை கடற்படை தீவிரம்!

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் ஈரானிய கப்பல்...

01 3
உலகம்செய்திகள்

கட்டாரில் உள்ள அமெரிக்க விமானத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்: 10 ஒற்றர்களைக் கைது செய்தது பாதுகாப்பு அமைச்சகம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில், கட்டாரில் உள்ள பிராந்தியத்தின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான...