6 18
உலகம்செய்திகள்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்! இறுதிப் போட்டி தொடர்பில் வெளியான தகவல்

Share

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக நிறுத்தப்பட்ட இந்தியன் லீக் போட்டிகள் மீண்டும் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ட்ரோன் தாக்குதலால் பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மே 24 ஆம் திகதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.

நிறுத்தம் செய்யப்பட்ட ஓவர்களில் இருந்து இந்த போட்டி தொடங்கும் என கூறப்படுகிறது.

ப்ளே ஆஃப் சுற்றுகளையும் சேர்த்து மொத்தம் இன்னும் 17 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இவை பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய 6 இடங்களில் மட்டுமே நடைபெறும்.இதில் எந்த போட்டியும் சேப்பாக்கத்தில் நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது.

ப்ளே ஆஃப் சுற்றை பொறுத்தவரையில் தகுதிகாண் போட்டி 1 – மே 29 எலிமினேட்டர் – மே 30 தகுதிகாண் போட்டி 2 – ஜூன் 1 இறுதிப் போட்டி – ஜூன் 3 ஆம் திகதி முறையே நடக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...