அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸ் தொற்றால் குழந்தைகள் மிகப்பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்டா வைரஸ் தொற்றால் இதுவரை இல்லாதளவுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.
ஏனைய வகை கொரோனா வைரஸ் திரிபுகளைவிட டெல்ரா வகை வைரஸ் மிக வீரியம்மிக்கது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனாத் தொற்று காரணமாக அமெரிக்காவில் பாடசாலைகள் திறக்கப்பட்டமையும் இதற்கு காரணமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.